’’தனிசட்டம் இயற்றி வேதா இல்லம் அரசு இல்லமாக அறிவிக்கப்படும்” என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு !

0
249
kadambur raju

செக்காரக்குடியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் மாநில தலைவர் கிருஷ்ணபிள்ளை முன்னிலையில் அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள் அடங்கிய காய்கறி அடங்கிய தொகுப்புகளை 500 பேர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ’’மக்கள் சுய ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் 6 வது தடையாக கொரோனா தடுப்பு பணிகள் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியருடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இன்றைக்கு மீண்டும் உயரதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினரோடு காணொலிக் காட்சி மூலமாக தொடர்ந்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நட குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் 27 பேருக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து 26 பேர் வீடு திரும்பினர். அதன் பிறகு வெளிமாநிலங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து மகாராஷ்டிரா, மும்பை, குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வந்தவர்கள் மட்டும் 148 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 10 ஆயிரத்து 943 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 194 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 142 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 20 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் இப்படி தொடர்ந்து வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சமூக பரவல் இல்லாத நிலையை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமானது உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது ஒருவர் மட்டும் திருநெல்வேலியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களெல்லாம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறப்பான சிகிச்சையின் மூலம் நாள்தோறும் வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

OTT – தளத்தில் திரைப் படம் திரையிடுவது என்பது நமது அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம் அல்ல, இது உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு கூட தலையிட முடியாத சூழல் உள்ளது. சினிமா துறைக்கு இது ஆரோக்கியமானது அல்ல. இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆன்லைன் மூலமாக OTT பிளாட்பார்ம் மூலமாக வெளியிடுவது மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைவார்கள்.

சினிமா துறையில் 100 ஆண்டு காலத்தில் படத்தை எடுத்து திரையரங்குகள் மூலமாக சென்றடைந்தது இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் திரைப்பட வினியோகஸ்தர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சென்று பார்க்கும் வகையில் இருந்தது. OTT தளத்தில் படம் திரையிடுவது அனைவரையும் சென்றடையாது இதை சட்டம் போட்டு தடுக்கும் நிலை கிடையாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் அதற்கு அரசு உதவி செய்யும். தீபா அதிமுக மேல் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார் இது நீதிமன்ற நடைமுறையில் உள்ளதால் இது குறித்து பேசுவது சரியாக இருக்காது.

அரசு இல்லம் ஆக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் அரசு சட்டம் இயற்றி வேதா இல்லத்தை கொள்கை முடிவு எடுத்து அரசு இல்லம் ஆக அறிவிக்கும்,

திமுக வேண்டாத வேலைகளை செய்து வருகிறது கொரோனா நேரத்தில் மனுக்களை பெறுவது நடைமுறையில் சரியானது அல்ல, இதை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள், இது விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்கள் நல்லது செய்ய வேண்டும் மனுக்களை வாங்குவதற்கு இது உகந்த நேரமல்ல’’ என்றார் அமைச்சர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன், அறங்காவலர் குழு தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார், கருங்குளம் ஒன்றிய துணைச் சேர்மன் லட்சுமணன், உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here