”தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு உதவியாளர் பணியிட எழுத்து தேர்வு தற்காலிக ஒத்தி வைப்பு”

0
72
tuty co.oprative

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களின் உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்துதேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாகவுள்ள 30உதவியாளர் பணியிடங்கள் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களிலுள்ள 66உதவியாளர் காலிப்பணியிடங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக நிரப்பப்படவுள்ளது. இதற்கான எழுத்துதேர்வு இன்றும்(30ம் தேதி) நாளையும்(31ம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போதுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 4வது கட்டமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கூட்டுறவு www.tutdrp.inஇணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here