’’பனைமரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிட கோரிக்கை’’

0
176
panai maram

தூத்துக்குடி, மே.30:

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிட வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி 30வது வட்ட அமமுக செயலாளர் நடிகர் காசிலிங்கம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் பனைத்தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

போதிய வருமானம் இல்லாமல் பனைத்தொழிலாளர்கள் பரிதவித்துவரும் நிலையில், கடந்த 22ம் தேதி திருச்செந்தூர் அருகே சோலைகுடியிருப்பில் பனைத்தொழிலாளி தாசன் என்பவர் பனையில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்துவிட்டார். உயிர் இழந்துள்ள பனைத்தொழிலாளி தாசன் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவித்தொகை வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவேண்டும்.

தமிழகம் முழுவதும் இதனை நடைமுறைப்படுத்துவதுடன், பனைத்தொழில் இல்லாத காலங்களில் உதவித்தொகையும் வழங்கிடவேண்டும், பனை ஏறுவதற்கான தொழில்நுட்ப கருவிகளை அரசே வழங்கிடவும் வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here