அவசர கால கடன் திட்டத்தில், 53 ஆயிரம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வணிகர்களுக்கு கடன் – தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அறிக்கை !

0
60
tamilnadu mercantile l

அவசர கால கடன் திட்டத்தில், 53 ஆயிரம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

’’தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, கடந்த 28 ஆண்டுகளாக, பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. கோவிட்-19 தொற்றுநோய், நாடு முழுவதும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல், எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.

இந்திய அரசு, கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார பாதிப்பை மீட்டெடுக்க “சுயசார்பு பாரதம்” என்ற திட்டத்தில் ரூபாய் 20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கிகள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட அவசர கால கடன் திட்டத்தின் மூலம், கூடுதல் இணை பாதுகாப்பு இல்லாமல், ரூபாய் 3 லட்சம் கோடி கூடுதல் கடன் அளிக்கும் திட்டம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான கே.வி.ராமமூர்த்தி கூறும்போது,”தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தமது வாடிக்கையாளர் ஆகிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் வணிகர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 29.02.2020 தேதியின்படி அவர்களின்கணக்குகளில், இருப்பு நிலுவையிலுள்ள தொகைக்கு, 20 சதவீதம் கூடுதலாக பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களா கிய, 53 ஆயிரம் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் பயன் அடைவார்கள். இதற்கான உத்தரவு அனைத்து கிளைகளுக்கும் பிறப்பிக்கப்பட்டு, கடன் வழங்கல் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் உத்தரவாத கட்டணம் பரிசீலனைக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது.

இத்திட்டத்தின்கீழ் தகுதி உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வணிகர்கள், விருப்பமுள்ள முத்துரா கடனாளிகள் தங்களது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளைகளை அணுகலாம்” என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here