தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து நிவாரண பொருட்கள் – சி.த.செல்லப்பாண்டியன் வழங்கி வருகிறார் !

0
85
s.t.sellapandian

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தொடர்ந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொடர் ஊரடங்கால் நாடு முடங்கி கிடக்கிறது. கடந்த மூன்று மாத காலம் மக்கள் வருவாய் இல்லாமல் இருந்து வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு தளர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் எந்த ஒரு மக்களும் வறுமையில் வாடிவிட கூடாது என்பதற்காக பல்வேறு அமைப்பினரும் அரசியல்கட்சியினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சி.த.செல்லப்பாண்டியன், தனது சொந்த செலவில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட..பகுதிகளில் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

தற்போது தூத்துக்குடி தெற்கு பகுதி வார்டு எண் 52 மற்றும் 54 ல் உள்ள பகுதிகளான..

1 பேரின்ப நகர், 2 வேலாயுத நகர், 3 பொண்ணான்டி நகர், 4 திருமாஞ்சி நகர், 5 கிருஷ்ணா நகர், 6 அய்யன் கோயில் தெரு, 7அம்மன் கோயில் தெரு, 8 ஆனந்த நகர், 9 சுந்தர நகர், 10 தங்கம்மாள்புரம், 11 சண்முகபுரம் ஆகிய பகுதியில் உள்ள ஆயிரம் குடும்பங்களுக்கு குடும்பங்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து அரிசி பைகளை வழங்கினார்.

1.மாலை 4:00 மணிக்கு பேரின்பநகர் கிறிஸ்தவ ஆலையம் அருகிலும், 2.மாலை 4:30 மணிக்கு அய்யங்கோவில் ரேசன்கடை அருகிலும், 3.மாலை 5:00 மணிக்கு சன்முகபுரம் மெயின்ரோடு அருகிலும், 4.மாலை 5:30 மணிக்கு சுந்தர்நகர் பூங்கா அருகிலும் அரிசி பைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அமலி T ராஜன், பொதுக்குழு உறுப்பினர் எஸ் கே மாரியப்பன், நெல்லை தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர்,கிழக்கு பகுதி செயலாளர் பி.சேவியர், மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன், மாவட்ட அம்மா பேரவை பி மூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எம் சி பி ஜீவா பாண்டியன் மாவட்ட பிரதிநிதி சேவியர், திருச்செந்தூர் முன்னாள் தொகுதிக் கழகச் செயலாளர் ராஜா நேரு, உப்பு தொழிலாளர் சங்கம் குருசாமி, தெற்கு பகுதி பொருளாளர் அனல் ராஜசேகர்,

வட்ட செயலாளர்கள் பெருமாள், ஜெகதீஸ், கோபி, சீனிவாசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், ஜெயக்குமார், வார்டு பொறுப்பாளர்கள், பூர்ண சந்திரன், டைமன் ராஜ், வட்ட பிரதிநிதிகள், பிளம்பர் இசக்கி முத்து, அருண்குமார், அய்யப்பன், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல இணைச்செயலாளர் பி சங்கர், நகர கிளை பொருளாளர் சண்முகராஜ், வார்டு நிர்வாகிகள் சுப்புராஜ், ஜோதிகா மாரி, நயினார், ஆறுமுக நயினார், வெற்றிச்செல்வன், முருகேசன், பச்சை பெருமாள், முத்துசாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, ஊர்காவலன், சிறுபான்மை பிரிவு பிரபாகரன், ஆகியோரும் வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here