துஷ்டி வீட்டிற்கு சென்று வந்தவர் மூலம் நாசரேத்தில் கொரோனா பரவல் – காவல்த்துறை. சுகாதாரத்துறை அதிகாரிகள் அலர்ட் !

0
168
corona virus

நாசரேத் அருகே வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து போலீசார், சுகாதாரத்துறையினர் அவரது உறவினர்கள், அவர் சென்ற இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாசரேத் அருகே உள்ள இடையன்விளை கட்டையனூரைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி சூரியகனி (65). இவர் கணவர் இறந்து போனதால் அவரது மகள் வழி பேரன் ஜெயபால் மகன் தனபாலுடன் (18) இருந்து வருகிறார். தனபால் கூலித்தொழிலுக்கு சென்று வந்தார். இதற்கிடையே சூரியகனி கடந்த வாரம் மாவடிபண்னையில் உள்ள அவரது உறவினர் துஷ்டி வீட்டிற்கு சென்று வந்தார்.

அவர் அங்கு சென்ற வந்தபின் உடல் நலம் குன்றி கடந்த 2ஆம்தேதி நாசரேத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு இறந்து போனதாக தெரிவித்தனர் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை. மாவடிபண்னையில் துஷ்டி வந்தவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டு தூத்துக்குடியில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறையினர் சந்தேகம் கொண்டு சூரியகனி பேரன் தனபாலை பரிசோதனை நடத்தினர். அதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு கொரோனா சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நாசரேத் பகுதியில் கொரோனா தொற்று பரவி உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாசரேத் காவல் ஆய்வாளர் சகாயசாந்தி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தங்கேஸ்வரன், சூரியன் மற்றும் சுகாதாரத்துறை யினர் சூரியகனி சென்ற தனியார் மருத்துவமனை, தனபால் சென்ற பகுதிகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நாசரேத் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here