குரும்பூர் அருகே கள்ளக்காதலியுடன் வாலிபர் மாயம்?

0
158
escape news

நாசரேத், ஜூன் 06: குரும்பூர் அருகே வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குரும்பூர் அருகே உள்ள வீரமாணிக்கம் கீழத்தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் மகன் ஆனந்தகிருஷ்ணன்(30). இவருக்கு திருமணமாகி, இவரது மனைவி பிரசவத்திற்காக தாய்வீடான நாசரேத்துக்கு சென்றுள்ளார். இதற்கிடையே இவரும், பக்கத்து வீட்டை சேர்ந்த திருமணமாகாத இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆனந்தகிருஷ்ணன் நேற்று முன்தினம் காலை முதல் திடீரென மாயமானார். இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த அந்த இளம்பெண்ணும் நேற்று முதல் மாயமானதாக தெரிகிறது.

இதுகுறித்து அவரது தந்தை நந்தகோபால், குரும்பூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் வழக்குப்பதிவு செய்து, மாயமான ஆனந்தகிருஷ்ணனை தேடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here