கோவில்பட்டியில் வரதட்சிணை கொடுமை : ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
39
fir news

கோவில்பட்டியில் காதல் திருமணம் செய்துகொண்ட மனைவியை தற்கொலை செய்ய தூண்டி வரதட்சிணை கேட்டு துன்புறுத்திய அவரது கணவரான ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்தவர் சங்கீதா(23). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ராணுவவீரரான லட்சுமிகாந்தனுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காதல் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, லட்சுமிகாந்தன் – சங்கீதா தம்பதி கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில்;, 50 பவுன் நகையை உன் வீட்டில் வாங்கி வா எனக் கூறி லட்சுமிகாந்தன், அவரது தந்தை செந்தூர்பாண்டி, தாய் முத்துலட்சுமி ஆகியோர் துன்புறுத்தினார்களாம். நகையை வாங்கிவரவில்லை என்றார் தற்கொலை செய்து கொள் என வற்புறுத்தி வந்தார்களாம்.

இதுகுறித்து சங்கீதா வரதட்சிணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டிய கணவர் லட்சுமிகாந்தன் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்குப்பதிந்து ராணுவவீரர் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here