மகாராஷ்டிராவில் திருப்பம்.. சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.. நாளை வரை டைம்!

0
275
siva sena

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து அதிரடியான அரசியல் மாற்றங்கள் நிகழ்த்து வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கூறியுள்ளது. சிவசேனா தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதால் பாஜக இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது.

இன்று மாலை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்கை அம்மாநில காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டாக சந்தித்தார்கள். எங்களால் ஆட்சி அமைக்க முடியாது. எங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்று பாஜக எம்எல்ஏக்கள் இந்த சந்திப்பில் கூறினர்.

ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிராவில் பாஜக கட்சி ஆட்சி அமைக்க முடியாது என்று கூறிய நிலையில் ஆளுநர் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். நாளை இரவு 7.30 மணிக்குள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரிய கட்சி

இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்து இருக்கிறார். சிவசேனாவிற்கு விருப்பம் இருந்தால் நாளை மாலைக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோரி கடிதம் அளிக்கலாம் என்று ஆளுநர் பகத் சிங் குறிப்பிட்டு இருக்கிறார்.

சிவசேனா ஆட்சி

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காத நிலையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்விகள் எழுந்தது. ஆளுநர் என்ன செய்ய போகிறார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் தற்போது சிவசேனா கட்சியை அவர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார்.

எத்தனை இடங்கள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here