காவல்த்துறை மூலம் ஏரலுக்குள் நுழைந்த கொரோனா!

0
555
eral police staion

தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய வியாபார ஸ்தலங்களில் ஒன்று ஏரல். சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமல்லாது, விலை குறைவாக இருப்பதால் நகர பகுதியில் இருந்தும் மக்கள் ஏரலுக்கு ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்களை வாங்க செல்வர். இப்போது அந்த ஏரலுக்கு காவல்துறை மூலம் கொரோனாவும் சென்றிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இறந்த ஒருவருடைய உடல் ஏரல் அருகே உள்ள மாவடிபண்ணை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடத்தப்பட்டது. கோவங்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மாவடிப்பண்ணை, தென் திருப்பேரை பகுதியில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாவடிப்பண்ணை லாக்டவுன் செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நாசரேத்திலும் ஏரலுக்கும் கொரோனா சென்றிருக்கிறது. மாவடிப்பண்ணையில் நடந்த இறுதி சடங்கில் கலந்து கொண்ட பலர் கொரோனாவில் சிக்கியிருப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில் ஏரல் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவருடை கார் ஓட்டுநர், ஒரு ஏட்டு,அதே காவல்நிலைய எஸ்.ஐ ஒருவர் என காவல்துறையினரின் தோலை பிடித்துக் கொண்டு கொரோனா ஏரலுக்குள் நுழைந்திருக்கிறது. அருகில் சிறுதொண்டநல்லூரிலும் தலைகாட்டியிருக்கிறது.

போலீஸாரிடம் யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்கிற விசாரணை நடந்து வருகிறது. ஏரல் போலீஸ் ஸ்டேசன் நன்றாக கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே இறந்த வீட்டிற்கு துணி வாங்குவதற்காக சிலர் ஏரலில் உள்ள ஜவுளி கடைகளுக்கு சென்று வந்திருக்கிறார்கள். அதனால் ஜவுளி கடைகளில் தொற்று பரவியிருக்க கூடும் என்கிற அச்சத்தில் சில ஜவுளிக்கடை ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here