கூட்டாம்புளியில் லாக் டவுன் தளர்வு – குறிப்பிட்ட பகுதி தவிர மற்றவை விடுவிப்பு

0
131
kootampuli

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளில் திருமண நிகழ்ச்சி மூலமாக 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் வருவாய்துறை,சுகாதாரத்துறை,காவல்துறை அதிகாரிகள் கூட்டாம்புளியில் முகாமிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கூட்டாம்புளி ஊர் முழுவதிற்கும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. இதற்கிடையே சுகாதாரத்துறை சார்பில் நோய் கண்டறியும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சிலருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேற்கொண்டு யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பது கண்டறிய பட்டது. இந்தநிலையில் இன்று கூட்டாம்புளி ஊருக்கு சென்ற கலெக்டர் சந்திப்நந்தூரி, ஆய்வு செய்தார்.

அதனடிப்படையில் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் கூட்டாம்புளி மேலத் தெருவில் 2 தெருக்களை மட்டும் தனிமைபடுத்திவிட்டு மற்ற பகுதிகள் அனைத்தையும் விடுவிக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சாலையின் குறுக்கே வைத்திருந்த அத்தனை பேரிகார்டுகளையும் காவல்த்துறையினர் அகற்றினர்.

குறிப்பிட்ட பகுதியிலிருந்து அதிக தூரத்தில் உள்ள சில கடைகளை திறக்கவும் மெயின் ரோட்டில் பழையபடி அனைத்து போக்குவரத்தையும் தொடரவும் கலெக்டர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் அடைத்து வைத்த அனைத்தும் திறந்துவிடப்பட்டது. குறிப்பிட்ட 2 தெருக்கள் மட்டும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. நாளை காலை முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிகிறது.

அனைவரும் கட்டாயமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியவேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here