ஸ்ரீவைகுண்டத்தில் அண்ணா திராவிடர் கழகத்தினர் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

0
241
admk news

ஸ்ரீவைகுண்டம், ஜூன்.12:

ஸ்ரீவைகுண்டத்தில் மாற்றுக்கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி தெற்குமாவட்ட அண்ணா திராவிடர் கழக மாவட்ட செயலாளரான தொழில்அதிபர் சங்கர்கணேஷ், துணைத்தலைவர் முத்துப்பாண்டி உள்பட சுமார் 300பேர் அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்குமாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர்ராஜூ, முன்னாள் அமைச்சரும், தெற்குமாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி மகளிர்களுடன் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இதில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் எம்.எல்-.ஏ, மோகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கருப்பசாமி, நகர செயலாளர் காசிராஜன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், வார்டு செயலாளர் பிச்சையா, இருளப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here