102வயதான ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரிடம் ஸ்ரீவை உதவி கருவூல அலுவலர் ஆசி..!

0
168
srivaikundam

ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் கருவூல அலுவலம் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதல் உதவி கருவூல அலுவலராக முத்துராசா பணியாற்றி வருகிறார். இவர், ஓய்வூதியம் பெறவரும் அனைவரிடமும் மிகவும் கனிவுடன் நடந்துகொள்வதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை தன்னால் முடிந்த அளவு செய்தும் வருகிறார்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள நாசரேத் சாமுஞானவிலாஸ் தெருவில் கோவை வேளாண்மை கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வுபெற்று 102வயதை அடைந்தநிலையில் டேனியல்சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருவதை கூடுதல் உதவி கருவூல அலுவலர் முத்துராசா அறிந்து ஆச்சரியம் கொண்டார்.

அதோடு, 102வயதான அவரிடம் ஆசி பெறுவது வாழ்வில் பெரும் பாக்யமாகும் என்றும் முத்துராசா நினைத்தார். இதனைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் ஓய்வுபெற்றோர் அலுவலர் சங்க தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரியுடன் கூடுதல் உதவி கருவூல அலுவலர் முத்துராசா நேரில் சென்று 102வயதான டேனியல்சுந்தர்ராஜிடம் ஆசி பெற்று மகிழ்ந்தார். அப்போது அவர் பணியாற்றிய காலகட்டம் குறித்த நிகழ்வுகளையும் கேட்டு மகிழ்ச்சி கொண்டார்.

இந்நிகழ்வில், நாசரேத் ஓய்வுபெற்றோர் அலுவலர் சங்க தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் கொம்பையா, பொருளாளர் மனோகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here