ஏரல் தாசில்தாரின் ஓட்டுநர், அவரது குடும்பதினர் 4 பேருக்குமே கொரோனா உறுதி

0
299
thoothukudi puducottai

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை ஆஸ்பத்திரி தெருவில் வசிப்பவர், ஏரல் தாசில்தாரின் ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மகன் ஒருவருக்கு காய்ச்சல் இருந்துவந்தது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரின் தந்தை, தாயார் மற்றும் அவரது தம்பி ஆகிய மூன்று பேர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.

அதற்கான ரிசல்ட் இன்று வந்தது. அதில் மேலும் மூன்று பேர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. அவர்களும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். புதுக்கோட்டை ஆஸ்பத்திரி தெரு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here