தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 600 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை

0
166
thoothukudi dist corona test

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 600 பேருக்கான கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.அதற்கான ரிசல்ட் இன்று வரயிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் 38 பேருக்கு ஏற்பட்டதில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில், முத்தையாபுரம், முள்ளக்காடு, முத்தம்மாள் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். முத்தம்மாள் காலனி பகுதி பெண் இன்கம் டாக்ஸ் துறையில் பணி செய்து வருகிறார். மதுரையிலிருந்து வந்த அவருக்கு, தொற்று ஏற்பட்டது என்று தெரியவில்லை அவரது உறவினர் வாகைகுளம் அருகே உள்ள திம்மராஜபுரம் உள்ள ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது தவிர ஓட்டப்பிடாரம், ஆத்தூர், நாகலாபுரம்,ஸ்ரீவைகுண்டம், கொடியன்குளம், சவேரியார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் இருந்து வந்தவர்கள் சளி காய்ச்சல் அறிகுறியுடன் வந்தவர்கள் தொற்றுமூலம் வந்த தொடர்பு மூலம் ஏற்பட்டிருக்கிறது. இம்மாவட்டத்தில் இதுவரை கூறியவற்றால் 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் இறந்துள்ளனர். 304 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று சுமார் 600 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது என்றும் டெஸ்ட் முடிவுகள் இன்று வெளிவரும் என்றும் தெரிகிறது. இதனால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here