தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் பழையகாயலில் இருக்கிறது தனியார் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை. அங்கு பணியாற்றும் ஊழியர்களில் ஒருவருக்கு கடந்தசில நாட்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் முத்தையாபுரம் ராஜூவ்நகரை சேர்ந்தவர்.
அதனைத் தொடர்ந்து மேலும் சிலருக்கு அதேபோல் பரிசோதனை செய்ததில் துறைமுகம் அருகே சுனாமிகாலனியை சேர்ந்த 3 பேர்களுக்கும், முள்ளக்காடு, நேருஜிநகர்,முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும் ஆக மொத்தம் ஏழுபேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதே தொழிற்சாலையில் மேலும் சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து அத்தொழிற்சாலையில் அரசு சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.