தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி சார்ந்த பயிற்சி வகுப்புகள்

0
64
thoothukudi city corporation

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

ஆன்லைன் மூலம் ஜூன் 1 முதல் பத்தாம் தேதி வரை நடத்தப்பட்ட வகுப்புக்களை ஆசிரியர்கள், பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் நடத்தினர். இருநூற்றுக்கும் அதிகமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது. சிறப்பான ஐந்து இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கூடுதலாக ரூபாய் 1000 ஊக்கத்தொகையை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் முனைவர் வி ப ஜெயசீலன் வழங்கினார். மேலும் இந்தநிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாநகராட்சி பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here