தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகக்குழு உறுப்பினர் பிள்ளையன்மனை; பி.பி.ஆர்.அகஸ்டின் மாரடைப்பால் மரணம்!

0
588
P.P.R.Augustin

நாசரேத் ஜுன்.19:தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகக்குழு உறுப்பினர் பிள் ளையன்மனை; பி.பி.ஆர்.அகஸ்டின் மாரடைப்பால் மரணமடைந்தார்.அன்னாரது உடல் அடக்கம் நாளை காலை 8 மணியளவில் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள பிள்ளையன்மனை கிராமத்தைச் சேர்ந்தவர் காலஞ்சென்ற ராஜபாண்டியன்நாடார் மகன் பி.பி.ஆர்.அகஸ்டின்(வயது 56). இவர் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் பிள்ளையன்மனை சேகரத்தில் இருந்து திருமண்டல பெருமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டு பின்னர் மர்காஷிஸ் சபை மன்றத்தில் இருந்து திருமண்டல நிர்வாகக்குழு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்று செயல்பட்டு வருகிறார். இவர் பிள்ளையன்மனையில் அமைந்துள்ள நாசரேத் மர்காஷிஸ் கலைக் கல்லூரியின் செயலாளராகவும் இருந்துள்ளார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் பிரிக்கப்படாததற்கு முனனர் திருநெல்வேலி திருமண்டலம் ஆக இருந்த போதே திருமண்டல நிர்வாகக்குழு உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.
இவர் இன்று (19.06.2019) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.அன்னாரது நல்லடக்கம் நாளை காலை 8 மணிக்கு பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவருக்கு சம்மா என்ற மனைவியும் ஹேரின் என்ற மகளும் ஜோ என்ற மகனும் உள்ளனர்.
படவிளக்கம்: பி.பி.ஆர்.அகஸ்டின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here