புதுக்கோட்டை அருகே தப்பி வந்த புள்ளி மான் – பொது மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

0
145
maan

சாயர்புரம், ஜுன் 21-

புதுக்கோட்டை அருகே உள்ள கீழக் கூட்டுடன்காட்டில் வல்லநாடு மலைப்பகுதியில் இருந்து தப்பி வந்த புள்ளிமானை ஊ இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று அதிகாலை வல்லநாடு மலைப்பகுதியில் இருந்து தப்பி வந்த புள்ளி மான் ஒன்று புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்கூட்டுடன்காடு காட்டுப் பகுதியில் சுற்றி திரிந்தது. இந்த மானை அங்கிருந்த நாய்கள் விரட்டி சென்றன. மான் உயிரை காப்பாற்றி கொள்ள அங்குமிங்குமாக ஒடித் திரிந்தது. இதை பார்த்த கீழக்கூட்டுடன்காடு ஊர் இளைஞர்கள் செல்வகுமார், சண்முகசுந்தரம், பாண்டி, ரமேஷ், பாலா ஆகியோர் அந்த புள்ளி மானை நாய்களிடம் இருந்து காப்பாற்றி அதை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அந்த மானை அவர்கள் கீழக்கூட்டுடன்காட்டில் உள்ள அரசு நூலகத்தில் கட்டி வைத்து விட்டு ஒட்டபிடாரம் வனவர் மகேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஒட்டபிடாரம் வனகாப்பாளர்கள் பேச்சிமுத்து, முகமது பைசல்ராஜா, ஆசிப்அலி, வல்லநாடு பிரிவு வனகாவலர் கருப்பசாமி, வேட்டை தடுப்பு காவலர் காந்திராஜா ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மானை மீட்டு வல்லநாடு மலை பகுதியில் கொண்டு விட வாகனம் மூலம் கொண்டு சென்றனர். மலை பகுதியில் இருந்து புள்ளி மான் ஊருக்குள் தப்பி வந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here