கோவில்பட்டியில் கிறிஸ்தவ பங்குத்தந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா

0
123
corona

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தை மற்றும் சென்னையிலிருந்து வந்த இருவரென மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உயிரிழந்த ஒருவரின் உடல் கோவில்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அந்த அடக்க நிகழ்ச்சியில் கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தை கலந்து கொண்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அவருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என ஏற்கனவே 9 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்குதந்தைக்கும் இப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு சம்மந்தம் இல்லாமல் சென்னையிலிருந்து வந்த 2 பேர்களுக்கும் தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here