இன்று சூரிய கிரகணம். உலகில் பல இடங்களில் அதை உணரலாம் என சொல்லப்பட்டிருந்து. அதன்படி பல இடங்களில் அதை காண முடிந்தது. அதன் கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் வெளியில் சுற்ற வேண்டாம் என பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

அதை ஏற்றுக் கொண்டு பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கினர். அதேநேரத்தில் எதைபர்றியும் கவலைப்படாத சிலர், இதை ஏற்றுக் கொள்ள மறுப்போர் என பலர் ரோடுகளில் சர்வ சாதாரணமாக சென்று வந்ததை பார்க்க முடிந்தது.
நமது பகுதியில் காலை 10.22 முதல் பிறபகல் 01.42 வரை பார்க்க முடியும் என்று சொலியிருந்தனர். அதன்படி பல இடங்களில் பார்க்க முடிந்தது. தூத்துக்குடியை பொறுத்தவரை காலை நேரங்களில் அதிக அளவில் வெயில் காணப்பட்டது. பிற்பகல் 01.45 மணி வாக்கில் சூரியனை மறைக்கும் அந்த காட்சி சிறிது நேரம் காணப்பட்டது.