மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 7ம் கட்ட‌ நிவாரண பொருட்கள் வழங்கல்

0
31
tutyonline

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 90க்கும் மேற்பட்ட‌ ஏழை, எளிய‌ மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் வேலை வாய்ப்பை இழந்த‌ ஏழை, எளிய மக்களின் பசியை போக்க, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அருள் ஆசியுடன் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 7வது கட்டமாக உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டையாபுரம், இளையரசனேந்தல், கோவில்பட்டி, க‌ழுகுமலை, மந்திதோப்பு, சிவகளை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், வறுமையில் வாடும் மக்கள் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மசலாப்பொருட்கள் மற்றும் மாஸ்க் உள்ளிட்ட‌ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிக‌ழ்ச்சியில், அற்புதம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜேம்ஸ், மன்ற தலைவர் மணி, மாவட்ட துணைத்தலைவர் பண்டார முருகன், கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, சக்திமுருகன், வீ.வேலு, சிவகளை செல்வராஜ், பொன்.காசிராஜன், கண்ணன், தாமஸ்ராஜன், வெங்கட சுப்ரமணியன், மீனாட்சிபாலா, ஆட்டோ மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here