கொரோனா தடுப்பு சிறப்பு நடவடிக்கை – காவலர் குடியிருப்புகளை ஆய்வு செய்கிறார் தூத்துக்குடி எஸ்.பி

0
123
news

கொரோனா தடுப்பு சிறப்பு நடவடிக்கையாக காவலர் குடியிருப்புகளை ஆய்வு செய்து வருகிறார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அருண்பாலகோபாலன்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பு பகுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ஆய்வு செய்து, காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கி, காவல்துறையினர் குடும்பத்தாருக்கு கபசுரக்குடிநீர்கொடுத்து, மத்திய பாகம் காவல் ஆய்வாளருக்கு கருவிக்ளை கொடுத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவல் குடியிருப்புகள், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவகம் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கிருமி நாசனி தெளிக்கவும், காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக்குடிநீர் மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் மற்றும் ஸிங்க் மாத்திரைகள் வழங்க உத்தரவிடப்பட்டு அவ்வாறு மாவட்டம் முழுவது வழங்கப்பட்டு வருகிறது.

இன்று (22.06.2020) காலை தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ஆய்வு செய்து, காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கபசுரக்குடிநீர் வழங்கி, தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் கணேஷ் முன்னிலையில் மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தெர்மல் ஸ்கேனர் கருவியை ஒப்படைத்து, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான அறிவுரைகளும் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here