தூத்துக்குடியில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா – அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்

0
120
thoothukudi district

சென்னையிலிருந்து வருவோர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்போர் என தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டும் 153 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளன. கடந்த 17ஆம் தேதி ஒரே நாளில் 50 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி 27 பேருக்கும் பத்தொன்பதாம் தேதி 28 பேருக்கும் இருபதாம் தேதி 46 பேருக்கும் கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 575 ஆக இருந்தது. இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று 40 பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று மட்டும் 50 பேர் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தூத்துக்குடி நகரில் டூவிபுரம், அண்ணாநகர், மில்லர்புரம், ராஜபாண்டிநகர், பூபாலராயர்புரம் உள்ளிட்ட பல இடங்களில் கொரோன தொற்று உள்ளது. அதேபோல் மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையாபுரம், திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கொரோனா தொற்று பரவி இருக்கிறது.

அதேநேரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் தினமும் அதிகரித்து வருகிறது. இது ஆறுதலான விசயமாகும். மாவட்டத்தில் நேற்று வரை 425 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேலும் 19 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்க்ள்.

இதனால் அவற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் 50 பேர் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் இன்று காலை ஏழு மணி நிலவரப்படி 209 பேர் உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here