ஸ்ரீவைகுண்டம் விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைய பயிற்சி கொடுக்கப்பட்டது

0
362
agri news

ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின்கீழ் 2019-20ம் ஆண்டில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டுப்பண்ணைய திட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு ‘கூட்டுப்பண்ணையம்’ குறித்த மாநில அளவிலான சிறப்பு பயிற்சி முகாம் மதுரை தானம் அறக்கட்டளையில் நடைபெற்றது.

பயிற்சி முகாமிற்கு அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா தலைமை வகித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அசோக் அய்யாச்சாமி, முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். தானம் அறக்கட்டளை இயக்குநர் ஜானகிராமன் சிறப்பு பயிற்சி முகாமினை துவக்கி வைத்து பேசினார்.

முகாமில், ‘சந்திரபுரஸ்கார் விருது’ பெற்ற விவசாயி சின்னப்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கூட்டுப்பண்ணைய விவசாயிகளுக்கு, கூட்டுப்பண்ணைய விவசாயத்தில் அதிக மகசூல் மற்றும் கூடுதல் லாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் குறித்தும், வேளாண்துறை ஏற்பாட்டில் ‘’நீர் பரிசோதனை களப்பார்வையில்’’ என்ற தலைப்பில் ஆய்வாளர் ஆறுமுகமும் நீர் பயன்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினர்.

கொட்டாம்பட்டி வயலக வட்டாரம் மற்றும் விவசாய பண்ணையங்கள் மூலமாக பங்கேற்ற வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுப்பண்ணைய விவசாயிகளுக்கு வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள், லாபம் தரும் அசோலா உற்பத்தி, பஞ்சகாவ்யா தயாரிப்பு, கூடுதல் மகசூல் பெறும் முறைகள், உரங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்தும், வயலக வானொலி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா ‘வயலக வானொலி ஒளிபரப்பு 90.4’ மூலமாக விவசாயிகள் பயன்பெறும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். முடிவில், பயிற்சி முகாமில் பங்கேற்ற கூட்டுப்பண்ணைய விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா, உதவி தொழில்நுட்பமேலாளர்கள் அசோக் அய்யாச்சாமி, முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here