குரும்பூர், ஜூன் 23 குரும்பூரில் அமமுக சார்பில் பொதுமக்கள் 200 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பலர் வேலையில்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நிவாரணப்பொருளாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஆழ்வை ஒன்றியம் மற்றும் அங்கமங்கலம் ஊராட்சி சார்பில் குரும்பூரில் நேற்று ஏழைகள் 200 பேருக்கு நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய செயலாளர் சேக்தாவூத்தூர் தலைமை வகித்தார். குரும்பூர் நகர செயலாளர் சிங்கராஜ் முன்னிலை வகித்தார். அங்கமங்கலம் ஊராட்சி செயலாளர் எம்.என்.சி. நட்டார்துரை வரவேற்றார். தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் அமமுக கொடியேற்றி, ஏழைகளுக்கு நிவாரண பொருள் வழங்கினார்.
இதில் ஆழ்வை., ஒன்றிய சிறுபாண்மை பிரிவு தமிம்முன்அன்சார், அங்கமங்கலம் கிளை செயலாளர் ஜெபசீலன், கண்ணன், அந்தோணி, கண்ணன், பாலாஜி, ஆத்தூர் நகர செயலாளர் முருகானந்தம், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.