சிவகளை தொல்லியல் களத்தை பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டு மகிழ்ந்தனர்

0
568

சிவகளை தொல்லியல் களத்தை பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சிவகளை பரும்பில் தொல்லியல் களஆய்வு பகுதியான ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியாக முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள், இரும்பிலான அக்கால அரியவகை பொருட்கள், சில வகை போர் கருவிகள் என முதுமக்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரியவகை பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

தொல்லியல் துறைக்கு ஆதாரமான இப்பொருட்களை ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியரான சிவகளையை சேர்ந்த மாணிக்கம் தனது ஆய்வுகட்டுரைக்கான களஆய்வின்போது கண்டறிந்துள்ளார்.

இதுபோன்று சிவகளை குளக்கரையில் அக்கால வட்டெழுத்து கொண்ட கல்வெட்டுகள் இருப்பதும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வுப்பணிகளை ஆசிரியர் மாணிக்கம் தொடர்ந்து மேற்கொண்டும் வருகிறார். உலக நாகரீகத்தின் தொட்டிலாக விளங்கும் ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியாக சிவகளையிலும் பல்வேறு வகையிலான அக்கால பொருட்கள் கண்டறியப்பட்டு வருவதை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் வந்த பார்த்து ரசித்து வியந்து செல்கின்றனர்.

இந்தவகையில், நாசரேத் அருகிலுள்ள ஆனந்தபுரம் ரஞ்சிஆரோன் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டேவிட் வசந்தகுமார் தலைமையில் வரலாற்று ஆசிரியர் ஸ்டீபன், பயிற்சி ஆசிரியை&ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் சிவகளை தொல்லியல் களப்பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.

ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்களுக்கு சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள், சுண்ணாம்பினால் செய்யப்பட்ட முதுமக்கள் தாழிகள், அரியவகை இரும்பு கருவிகள், போர் கருவிகள் போன்றவற்றை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் காண்பித்து அது குறித்தும், முதுமக்களின் கற்கால வாழ்க்கை நிகழ்வுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். முதுமக்கள் பயன்படுத்திய பொருட்களை கண்ட மாணவ, மாணவியர் வியப்படைந்தனர்.

ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடிக்கு அடுத்தபடியாக சிவகளையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்கள் குறித்து அகழாய்வு நடத்தப்படும் என்று தொல்லியில் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here