தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வணிகம் ரூ.65 ஆயிரம் கோடி – நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி தகவல்

0
34
tamilnadu mercantle

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மொத்த வணிகம் ரூ.65 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் வங்கியாகும். வங்கி தனது வரலாற்றில் தொடர்ந்து 98 வருட காலமாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கி 509 கிளைகள், 1,156 ஏடிஎம் மையங்கள், 31 இ-லாபி மையங்கள், 165 கேஸ் ரிகலைசர் மெசின் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 45 லட்சத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் 2019-2020 நிதி ஆண்டின் தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் இயக்குனர் அண்ணாமலை மற்றும் பிற இயக்குனர்கள் முன்னிலையில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேவி ராமமூர்த்தி தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். அப்போது வங்கியின் முதன்மை நிதி அதிகாரி, உதவி தலைவர் மற்றும் பொதுமேலாளர்களும் உடனிருந்தனர்.

2019-2020 ஆண்டில் வங்கியின் செயல்பாட்டினை விளக்கும் சிறப்பம்சங்கள் : 2019-2020ம் நிதியாண்டில் வங்கியானது பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளது. இதற்கு வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குநர் குழு தரும் உற்சாகம், உயர் நிர்வாகக் குழுவின் சீரிய திட்டம் மற்றும் அதனை செயல்படுத்தும் அணுகுமுறை, வங்கி ஊழியர்களின் அயராத உழைப்பு மற்றும் இவற்றிற்கு எல்லாம் மேலாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தரும் பொன்னான ஆதரவு ஆகியவைதான் இச்சாதனைகளை எட்டிட உதவியது என்றால் அது மிகையாகாது. 2019-2020 ஆம் நிதியாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 4.68% வளர்ச்சி அடைந்து ரூ.65,061.21 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ36,825.03 கோடி ஆக உயர்ந்துள்ளது. கடன்களை பொறுத்தமட்டில் ரூ. 28,236.18 கோடி என்ற நிலையில் உள்ளது.

முன்னுரிமை மற்றும் எம்எஸ்எம்இ துறைகளுக்கு கடன் வழங்கலில் வங்கியானது விவசாயம், குறு, சிறு தொழில் கடன், வியாபாரக் கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40 சதவிதம் என்ற இலக்கை விட அதிகமாக 68.49% என்ற விகிதத்தில் உள்ளது. முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.16,933.90 கோடியில் இருந்து ரூ. 18,711.73 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 10.50% ஆகும். விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ₹6,993.90 கோடியாக உள்ளது.

இத்துறைக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவு 18% மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 25.60% கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எம்எஸ்எம்இ துறைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.10,082.77 கோடியிலிருந்து ரூ,10,706.08 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 6.18% ஆக உள்ளது. வங்கியின் வைப்புத் தொகை ரூ 36,825.03 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது கடந்த ஆண்டு ரூ 35,136.23 கோடி. இதன் வளர்ச்சி விகிதம் 4.81% ஆக உள்ளது. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 9.99% வளர்ச்சி அடைந்து ரூ.9,518.08 கோடியாக உள்ளது. கடன்களைப் பொருத்தமட்டில் 4.51% வளர்ச்சி அடைந்து ரூ 28,236.18 கோடி என்ற நிலையில் உள்ளது.

வட்டி இல்லா வருமானம் ரூ 526.45 கோடியாக உயர்ந்துள்ளது (கடந்த ஆண்டு 414.31 கோடி). வங்கியின் இயக்க செலவுகள் ரூ. 850.91 கோடியாக உயர்ந்துள்ளது (கடந்த ஆண்டு ரூ.760.23 கோடி). வங்கியின் செயல்பாட்டு இலாபம் ரூ.884.24 கோடியில் இருந்து ரூ.995.05 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர இலாபம் ரூ. 258.58 கோடியில் இருந்து ரூ. 407.69 கோடி ஆக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ. 1,230.16 கோடியிலிருந்து ரூ.1,319.51 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர மதிப்பானது ரூ.3,618 கோடியிலிருந்து ரூ.3,980 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 10.01% ஆகும். வட்டி வருமானம் ரூ. 3,224.46 கோடியில் இருந்து ரூ.3,466.11 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 7.49% ஆகும்.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வட்டியானது ரூ.1,994.30 கோடியிலிருந்து இவ்வாண்டு ரூ.2,146.60 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.152.30 கோடி (7.64%) உயர்ந்துள்ளது. (கடந்த ஆண்டு 4.32%). மொத்த கடன்களில் மொத்த வருவாய் ஈட்டா கடன்கள் 3.62% ஆகவும், நிகர வருவாய் ஈட்டா கடன்கள் கடந்த ஆண்டு 2.40%ல் இருந்து 1.80% ஆக குறைந்துள்ளது. கேபிடல் அடிகியூசி விகிதம் (பேஸ் 3) 16.17% என்ற விகிதத்தில் இருந்து 16.74% என்ற விகிதமாக உயர்ந்துள்ளது. கேபிடல் அடிகியூசி விகிதம் (பேஸ் 2) 16.20% என்ற விகிதத்தில் இருந்து 16.76% என்ற விகிதமாக உயர்ந்துள்ளது. பிசிஆர் 73.61% என்ற விகிதத்தில் இருந்து 80.75% என்ற விகிதமாக உயர்ந்துள்ளது. ஒரு பங்கின் தற்போதைய புத்தக மதிப்பு ரூ. 279.25 ஆக உள்ளது. இதன் முகமதிப்பு ரூ. 10 ஆகும். பங்கு ஆதாயத்தின் மதிப்பு ரூ. 28.61 ஆகும்.

விரிவாக்கங்களை பொறுத்வரை புதிதாக 4 ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 31.03.2020 அன்றைய நிலவரப்படி வங்கியின் மொத்த ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை 1,156 ஆகும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிதாக 4 இ- லாபி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 31 ஆகும். எடிஎம்-களில் 33 கேஷ் ரீசைக்ளர் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 165 ஆகும்.

2019-2020ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய திட்டங்கள் பின்வருமாறு, பணத்தை வரிசைப்படுத்தவும், பிரிக்கவும், தொகுக்கவும் ரோபோடிக் செயல்பாடுகள் சென்னையில் துவக்கப்பட்டது. மேலும் 11 நகைக்கடன் வழங்கும் மையங்கள் துவக்கப்பட்டன. 31.03.2020 அன்றைய நிலவரப்படி மொத்த எண்ணிக்கை 22 ஆகும்.வங்கியின் இணையதளம் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டது. வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கோ பிராண்டட் கார்ட் தூத்துக்குடியிலும், சென்னையிலும் மற்றும் சென்னை சில்க்ஸ் கோ பிராண்டட் கார்ட் தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் தொடங்கப்பட்டது. அரசாங்க பரிவர்த்தனைகளை கையாள புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.

2019-2020 நிதி ஆண்டிற்கான வணிக திட்டங்கள் பின்வருமாறு சீரான மற்றும் தொடர்ந்து சிஏஎஸ்ஏ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல், இந்த ஆண்டு சில்லறை வர்த்தக கடன்கள் வழங்குவது முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான வங்கி சேவையினை அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது ,கோவிட் 19 தொற்று பிரச்சினையின் போது இசிஎல்ஜிஎஸ் திட்டத்தின் கீழ் ரூ.927.63 கோடிகளை வங்கி வழங்கியுள்ளது.

67% தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் கொரோனா கால கடன் ஒத்திவைப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர் . கொரோனா கால திட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலான ரூ.7.01 கோடியை விட (5%) கூடுதலாக 36.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021 நிதி ஆண்டிற்கான புதிய திட்டங்கள் : புதிதாக 50 இலாபி மையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பினாகிள் 1.0 மைகிரேசன் (Finacle 10.xMigration) டிஎம்பி வாட்ஸ்அப் செயலி வங்கி சேவை ,பாரத் பில் பேமெண்ட் ,மொபைல் பேங்கிங் (கேபெக்ஸ் மாடல்) அறிமுகம் செய்யப்பட உள்ளது.மையப்படுத்தப்பட்ட கணக்கு திறப்பு வசதி , வீடியோ கேஒய்சி மற்றும் டிஜிட்டல் கேஒய்சி அறிமுகம் படுத்தப்பட உள்ளது ,வாடிக்கையாளர் உறவு வேளாண்மை ,அதிநவீன கால் சென்டர் செயல்பாடுகள் (24/7) அறிமுகம் செய்யப்பட உள்ளது’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here