சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் இழுபறி

0
141
saththankulam news

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் மற்றும் அது சார்ந்த பணியாளர்கள் தயாராக இருந்தும் பிரேதபரிசோதனை நடத்தப்படவில்லை.

இருவர் சாவுக்கும் காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இறந்தவர் உறவினர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. பிரேதபரிசோதனை முடிந்த பிறகு அதன்படி நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது அரசு தரப்பு.

இறந்தவர் தரப்பிற்காக அவ்வப்போது முக்கியஸ்தர்கள் வந்து பேசுகிறார்கள். எனினும் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அநேகமாக இறந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே பாதுகாப்பாக வைக்கும் திட்டம் முடிவாகும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here