சாத்தான்குளம் ஆய்வாளர், 2 உதவிஆய்வாளர்கள், காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் – ராணி வெங்கடேசன் கோரிக்கை

0
339
ranivenkadesan

நாசரேத்,ஜுன்.25:சாத்தான்குளம் போலீஸ் தாக்கியதில் மரணமடைந்த தந்தை, மகன் விவகாரத்தில் ஆய்வாளர்,2 உதவிஆய்வாளர்கள்,காவலர்களை பணி நீக்கம் செய்து அந்தக்குடும்பத்திற்கு உரியநிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சாத்தான்குளம் சட்டமன்ற தோகுதி முன்னாள் உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினருமான ராணிவெங்கடேசன் விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ்.இவரது தந்தை ஜெயராஜ். தகப்பனும், மகனும் சேர்ந்து கடந்த 19-ஆம் தேதி ஊரடங்கை மீறி கடையைத் திறந்து வைத்திருந்ததா கக்கூறி பென்னிக்ஸ்,ஜெயராஜ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கைதுசெய்து கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.

கைது நடவடிக்கையின் போது தந்தை,மகனை சாத்தான்குளம் போலீசார் கடுமையாக தாக்கியதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் பென்னிக்ஸ் திங்கள்கிழமை இர வும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

இந்தச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவிஆய்வாளர்கள் ரகுகணேஷ்,பால்துரை,பாலகிருஷ்ணன்,காவலர்கள்வேலுமுத்து, ஜேசுராஜ்,சாமத்துரை,பாலா மற்றும் இதில் சம்பந்தப்பட்வர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவர்களுக்கு உதவியாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்எனக்கூறிக்கொண்டு செயல்பட்ட கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா ஆகியோர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும். மேலும் இந்தக் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதாது ஒரு கோடி வழங்க வேண்டும்.தந்தை மகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்க டேசன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here