நியாயம் கிடைக்கும் வரை திமுக போராடும் – சாத்தான்குளத்தில் கனிமொழி எம்.பி பேட்டி

0
84
kanomozhi

கோவில்பட்டி கிளைச்சிறைச்சாலையில் இருக்கும்போது உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேட்டி கொடுக்கும் போது இவ்வாறு தெரிவித்தார் கனிமொழி எம்பி.

மேலும் அவர், ‘’உடற்கூறு ஆய்வு முடிவதற்கு முன்பே தமிழக முதலமைச்சர் நோயின் காரணமாக இறந்தார் என அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வரின் இந்த கூற்றால் வழக்கு விசாரணை திசை திரும்பி விடக்கூடாது.

இதுபோல் லாக்கப் இறப்பு சம்பவம் இனிமேல் தமிழ்நாட்டில் எப்போதும் நடைபெறக் கூடாது. நீதிமன்றம் விசாரணை அறிக்கை கேட்டுள்ளது. நீதிமன்றங்களை நம்புகிறோம் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் நியாயம் கிடைக்கும் வரை திமுக உங்களோடு இணைந்து போராடும்’’ இவ்வாறு தெரிவித்தார் கனிமொழி எம்.பி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here