உள்ளாட்சி தேர்தல் குறித்து அவசர செயற்குழு கூட்டம் – கீதாஜீவன் அறிவிப்பு

0
225
geethajeevan

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

’’தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அவசர செயற்குழுக் கூட்டம் 14.11.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில் கலைஞர் அரங்கத்தில் வைத்து நடக்கிறது. செல்வராஜ் தலைமை வகிக்கிறார். பெருமாள் முன்னிலை வகிக்கிறார்.

    கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன். 
பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் குறித்தும்       உள்ளாட்சித்தேர்தல் குறித்தும் மேலும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் கீதாஜீவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here