சாத்தான்குளம் நீதிமன்றத்துக்கு பணிக்கு வந்த தலைமை எழுத்தர் மீது தாக்குதல்

0
43
sathankulam

சாத்தான்குளம், ஜூன் 26:

சாத்தான்குளம் நீதிமன்ற பணிக்கு பைக்கில் வந்த நீதிமன்ற தலைமை எழுத்தரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றுபவர் சரவணமுத்து (56). இவர் தூத்துக்குடி முன்சீப் கோர்ட்டில் இருந்து சாத்தான்குளம் நீதிமன்றத்துக்கு அயல் பணியில் கடந்த 1ஆம் தேதி முதல் பணி செய்து வருகிறார்.தினமும் பஸ்ஸில் சாத்தான்குளத்திற்கு வேலைக்கு வந்து செல்வார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர்கள் கோவில்பட்டி ஜெயிலில் மர்மமான முறையில் இறந்¢ததால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொது மக்களின் போராட்டம் காரணமாகஅசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் கடந்த 3 நாட்களாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பஸ்கள் ஓடவில்லை.

இதனால் அவர் பைக்கில் தூத்துக்குடியில் இருந்து தினமும் வேலைக்கு வந்து செல்கிறார். நேற்று காலை வழக்கம்போல் தனது பைக்கில் பணிக்கு வரும் பொழுது சாத்தான்குளம் கருமேனி ஆற்று பாலத்தில் வந்தபோது எதிரே மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, நீங்கள் நீதிமன்ற ஊழியர்தானே என விசாரித்துள்ளனர். அவர் ஆமா என்றதும் அங்கு வந்த 5க்கு மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதனால் காயமடைந்த கிடந்தவரை அந்தவழியில் வந்தவர்கள் மீட்டு சாத்தான்குளம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனையறிந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தில் முகாமிட்டிருந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் மருத்துவமனைக்கு நேரில்சென்று விசாரணை நடத்தினார் .மேல்சிகிச்சைக்காக சரவணமுத்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சகாயசாந்தி, வழக்குபதிந்து நீதிமன்ற தலைமை எழுத்தர் சரவணமுத்துவை தாக்கிய மர்ம நபர்களைத் தேடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here