சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிப்பிற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0
417
congress

சாத்தான்குளம், ஜுன் 26-

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின் போது வியாபாரிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை வைத்திருந்த தந்தை, மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை ஊரடங்கு நேரத்தில் கடை திறந்திருந்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்த நிலையில் அவர்கள் இருவரும் மர்மமான முறையில் மரணமடைந்தனர். போலீஸார் கடுமையாக தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளார்கள் என இறந்தவர்களின் உறவினர்கள் பொது மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்;வசி அமிர்தராஜ் ஆலோசனையின் பேரில் நேற்று சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தந்தை, மகன் இறப்பிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மேல் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்திரவிட வேண்டும். இது தவிர இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்கி அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார்.. சாத்தான்குளம் வட்டார தலைவர் ஜனார்தனன் முன்னிலை வகித்தார். வட்டார தலைவர்கள் ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, ஆழ்வை கோதண்டராமன், திருச்செந்தூர் சற்குரு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன் துரை, செயலாளர் இசைசங்கர், நகரத் தலைவர்கள் வேணுகோபால், ஆத்தூர் பாலசிங், ஸ்ரீவைகுண்டம் சித்திரை, ஒ.பி.சி மாவட்ட தலைவர் தாசன், லூர்துமணி, சுதாகர், பெனிஸ்டன், சிவனைந்தபெருமாள், தனுஷ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயராஜ், மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here