புத்தன்தருவையில் மூடி இல்லாமல் காணப்படும் கிணறு – பொதுமக்கள் புகார்

0
13
sathai news

சாத்தான்குளம், ஜூன் 26:

புத்தன்தருவை கீழ் ஊரில் அபாய நிலையில் மூடி இல்லாமல் காணப்படும் கிணற்றில் மூடி போட்டு பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை கீழுரில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து அப்பகுதி சப்பு தண்ணீர் பெற்று பயனடையந்து வருகின்றனர். ஆனால் இந்த கிணறு மேல் மூடி இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது.

தற்போது கிணற்றை சுற்றி தரை உயர்ந்து போனதால் இந்த கிணறு நிலமட்டத்தில் மிக தாழ்வாக மாறி போனது. இந்த கிணற்று குடியிருப்பு பகுதியில் உள்ளதால் குழந்தைகள் கிணற்று அருகில் விளையாடி வருகின்றனர். கிணறு பாதுகாப்பு இல்லாமல் மூடப்படாமல் உள்ளதால் எந்நேரமும் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆதலால் அதிகாரிகள் பார்வையிட்டு கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு வலையத்தால் மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து புத்தன்தருவை எஸ்டிபிஐ கட்சி கிளைத் தலைவர் எஸ். ஏ. ரியாஸ் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here