சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் 25 லட்சம் நிதி உதவி

0
47
admk

சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் 25 லட்சம் குடும்ப நல நிதி உதவி வழங்கப்படும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஆகியோர் மரணம் அடைந்த துயர நிகழ்வு துரதிஷ்டவசமானது மிகவும் வேதனைக்குரியதுமாகும். இத்தகைய வேதனையளிக்கும் சம்பவங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

குடும்பத்தில் இரண்டு துண்களாய் இருந்த தந்தையையும் மகனையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

தமிழக மக்களின் அடைக்கல்மாகவும் அரணாகவும் திகழும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் குடும்ப நிதி வழங்கப்படும்.

தமிழ்நாடு மக்களின் நலனுக்காகவே அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்பட்டு வரும் கழக அரசும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் என்றென்றும் மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் பணியாற்றி நீதியை நிலைநாட்டும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here