கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேரந்த மாடசாமி என்பவரின் மகன் வினோத்குமார்(23 ).இவர் டிப்ளமோ சிவில் படித்து விட்டு கோவையில் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் சொந்த ஊருக்கு வந்தார். இன்று குப்பனாபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு உசிலாங்குளம் அருகே இருந்த கல்குவாரியில் நண்பர்களுடன் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக வினோத்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் கயத்தார் போலீசார் மற்றும் கழுகுமலை தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். உயிரிழந்த வினோத்குமார் உடலைக் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.