கோவில்பட்டி அருகே வாலிபர் தற்கொலை – போலீஸ்சார் அடித்ததால் நடந்தது என குற்றசாட்டு !

0
37
eattayaiyapuram

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் மேலத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கணேசமூர்த்தி (29) கட்டித்தொழிலாளி. இவர் கடந்த சனிக்கிழமை மாலை மதுபோதையில் பைக்கில் சென்றபோது தவறிவிழுந்துள்ளார். அப்போது அவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த கணேசமூர்த்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது மகனின் பள்ளி நோட்டில் தனது மரணத்திற்கு உளவுத்துறை காவலர் கார்த்திக்தான் காரணம் என்று எழுதிவைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

அவரது உடல் எட்டயபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் நிலவி வருவதால் எட்டயபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here