ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் செல்போன் வீடியோ காட்சியில் சரத்குமார் ஆறுதல் கூறினார்

0
43
sarathkumar

போலீசார் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு செல்போல் வீடியோ காட்சி மூலம் சரத்குமார் ஆறுதல் கூறினார்.

சாத்தான்குளம், ஜூன் 27:

போலீசார் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் நடிகர் சரத்குமார் செல்போன் வீடியோ காட்சி மூலம் ஆறுதல் கூறினார்.

சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை நடத்தியதாக கூறி போலீசார் தாக்கியதில் சிறையில் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக 2 எஸ்.ஐ உள்ளிட்ட 4பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே மதுரை ஐகோர்ட் தானாக முன்வந்து இந்த பிரச்னையை விசாரிக்க முடிவு செய்ததன் பேரில் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் சுந்தர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அப்போது சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார், உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினரோடு செல்போன் வீடியோ காட்சி மூலம் உரையாற்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதன்பின் ஜெயராஜ் அவர்களின் மனைவி மற்றும் மகள்களிடம் சட்டரீதியான அனைத்து தேவைகளுக்கு நான் உதவியாகவும், பொருளாதார தேவைக்கு உதவியாக இருப்பேன் என்றும், குடும்பத்தின் மூத்த சகோதரன் போன்று இருந்து அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றும், உங்களுக்கு எந்த ஒரு உதவி வேண்டும் என்றாலும் என்னை அழைத்தால் எங்களுடைய இயக்கத்தின் நிர்வாகிகள் உங்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

அப்போது மாநில இளைஞரணி துணை செயலாளர் குரூஸ்திவாகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் தயா, சாத்தான்குளம் ஒன்றியச் செயலாளர் ஜான்ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சுதாகர், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்தி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சோடாரவி, உடன்குடிஒன்றிய செயலாளர் அம்மன்அழகேசன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் லென்சிங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here