தூத்துக்குடி முள்ளக்காடு சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி

0
50

மேற்படி நிகழ்ச்சியானது எதிர்கால விஞ்ஞானிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஓர் முயற்சியாகவும் மாணவஃமாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து அவர்களின் படைப்பை உலகறியச் செய்வதற்காகவும் இன்று (20.06.2019) காலை 10.00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்து மாணவ மாணவிகளின் விஞ்ஞான ரீதியான அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு அதற்கான விளக்கங்களையும் கேட்டறிந்து அவர்களை பாராட்டி ஊக்குவித்தார்.

இந்நிகழ்ச்சியில் புதிய தலைமுறை வார இதழ் ஆசிரியர் திரு. உதயசூரியன் அவர்கள் முன்னிலை வகித்தார். சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் திரு. சத்திய நேச குமார் வரவேற்றார்.
சாண்டி குழும நிறுவனத்தலைவர் திரு. செல்வராஜ் அவர்களும் அதன் துணைத் தலைவர் திரு. சாண்டி அவர்களும் தலைமை விருந்தினராகவும் புதிய தலைமுறை முதுநிலை மேலாளர் திரு. ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 30 பள்ளிகளின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட விஞ்ஞான ரீதியான அறிவியல் படைப்புகளை பார்வைக்கு சமர்ப்பித்து ஒவ்வொரு படைப்பிற்கு இரண்டு மாணவ மாணவிகள் வீதம் 400 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் வித்யாசம் வித்யாசமான படைப்புகளை சமர்ப்பித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here