பழுதடைந்த குடிநீர் குழாயை சொந்த செலவில் பழுது பார்த்தனர் நாசரேத் பொதுமக்கள்

0
74
nazareth

நாசரேத்,ஜூன்.27:நாசரேத் பேரூராட்சி வார்டு எண், 18 ஜெயபாண்டியன் தெருவில் உள்ள குடிநீர் தெரு குழாய் பழுது அடைந்திருக்கிறது. அதை சரி செய்ய சொல்லி பேரூராட்சி நிர்வாகத்திடம் அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனராம்.

ஆனால் பேருராட்சி நிர்வாகம் அதை சரி செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் நொந்துபோன ஜெயபாண்டியன் தெரு மக்கள் ஒன்று கூடி, அ.தி.மு.க. பிரமுகர் சரவணன் தலைமையில் தேவையான தொகையை பிரித்து, அதனை கொண்டு பழுது நீக்கம் செய்துவிட்டார்கள்.

தன் கையே தனக்கு உதவி, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு,கூடி வாழ்ந் தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு எற்ப இந்தசம்பவம் நாசரேத் பேரூராட்சியில் நடந்துள்ளது. இனியாவது நாசரேத் பேருராட்சி நிர்வாகம் விழித்துக் கொள்ளட்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here