ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கல் !

0
61
s.p.shanmuganathan

ஸ்ரீவைகுண்டம், ஜூன் 28:

ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து பகுதிகளிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தொடர் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் என ஏழை, எளிய மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட கொரோனா நிவாரணப்பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

தற்போது, தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பஞ்சாயத்து மக்களுக்கும் கொரோனா நிவாரணப்பொருட்களை எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தொடர்ந்து வழங்கி வருகிறார். இதன்படி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பராக்கிரமபாண்டி, வரதராஜபுரம், ஸ்ரீபராங்குசநல்லூர் ஆழ்வார்தோப்பு ஆகிய பஞ்சாயத்து கிராமங்களிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர்கள் சரவணன், அமுதாஅருள்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

இதில், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தனது சொந்த செலவில் பராக்கிரமபாண்டி பஞ்சாயத்தில் 350 பேருக்கும், வரதராஜபுரம் பஞ்சாயத்தில் 350 பேருக்கும், ஸ்ரீபராங்குசநல்லூர் பஞ்சாயத்தில் 300பேருக்கும் என ஆயிரம் பேருக்கு தனது சொந்த செலவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட கொரோனா நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

இதில், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், வாசுகிநடராஜன், ராமலட்சுமிநாகராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் சரவணன், அமுதாஅருள்ராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜ், முன்னாள் யூனியன் கவுன்சிலர் நாகராஜன் ஸ்ரீபராங்குச நல்லூர் வார்டு கவுன்சிலர் சேர்மதுரை, முன்னாள் ஊராட்சி செயலாளர் சிங்காரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here