கனிமொழி எம்பி தவறான கருத்தை பதிய வைக்க முயற்சிக்கிறார் – அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

0
19
kadanbur raju

கோவில்பட்டியில் இன்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கூறுகையில், ‘’சாத்தான்குளம் சம்பவத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். நான் தெரிவித்த கருத்தில் நீதிமன்ற முடிவின்படி அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்கிற கருத்தை தெரிவித்திருந்தேன்.

அதை மறைத்து, அரசு சம்மந்தப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக கனிமொழி MP அவர்கள் தவறான கருத்தை பதிய வைக்க முயற்சிக்கிறார். இதில் துளி அளவும் உண்மை இல்லை’’என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here