சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் சொல்வது தந்திரமான வார்த்தை – தூத்துக்குடியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

0
52
congress

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, இன்று 29.06.2020 தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார், ‘’சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இரட்டை கொலை காவலர்கள் நடத்தப்பட்டது என்பதில் மாற்று கருத்து கிடையாது. கொலை செய்யப்பட்டவர்கள் எந்தவிதமான குற்ற பின்னணியும் இல்லாதவர்கள் வியாபாரிகள், நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். எனவே அவருடைய மரணத்திற்கு நீதி வேண்டும் என்பது ஒரு சமூக நாகரீகத்தினுடைய கோரிக்கையாகும். அந்த கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

கொலைசெய்யப்பட்ட வியாபாரிகளுக்கு தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் இதில் எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் கொலை செய்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அது தவறு ஒரு சாதாரண குற்றச் செயலுக்கு கூட குற்றம் நிரூபிக்கப்படாத வரையில் கூட நாம் கைது செய்திருக்கிறோம். இவர்கள் விஷயத்தில் சமூகமே அவர்கள் தான் குற்றவாளிகள் என்று சொல்கிறபோதும் சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியான இல்லை.

இந்த சம்பவம் நடைபெற்ற உடனேயே சிபிஐ விசாரணை வேண்டும் என்று நான் சொன்னேன். ஏனென்றால் காவலர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இவர்களிடம் இதன் விசாரணையை கொடுக்கக்கூடாது. சிபிஐ விசாரணையே சரி என்று சொன்னேன். அந்த கோரிக்கை வலுப்பெற்றது இன்றைக்கு முதலமைச்சர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், உயர் நீதிமன்றத்தின் கருத்தை கேட்டு அதன் பிறகு சிபிஐ விசாரணைக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறார். இது ஒரு தந்திரமான புத்திசாலித்தனமான வேலையாகும்.

இதற்கு நீதிமன்றத்திற்கும் சம்பந்தமில்லை ஒரு முதலமைச்சர் நினைத்தால் சிபிஐக்கு இந்த வழக்கை உடனே மாற்றலாம். இது காலம் தாழ்த்துவதற்கான முயற்சி. எனவே தமிழக முதல்வருடைய இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நான் காவல்துறை தலைமைக்கும் தமிழக அரசின் தலைமைக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

குற்றவாளிகளுக்கு துணை போகாதீர்கள் தமிழக காவல்துறை பெரும் புகழ்பெற்றது. பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறது. அதில் இருக்கக்கூடிய ஒரு சிலருக்காக ஏன் சேற்றை வாரிப் பூசிக் கொள்ள வேண்டும் .எவ்வளவு தியாகம் செய்த உயர்ந்த அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றிய துறை இது. வாழ்க்கை முழுவதையும் காவல்துறைக்கு அர்ப்பணித்தவர்கள் இன்றைக்கு ஏன் தங்கள் மீது கரியைப் பூசிக் கொள்ள வேண்டும். எனவே யார் தவறு செய்தாலும் அவர்களை அப்புறப்படுத்துங்கள். அவர்களை கைது செய்யுங்கள் .சிபிஐ விசாரணைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அப்படி செய்தீர்கள் என்று சொன்னால் அது மிகவும் சரியாக இருக்கும் இதுதான் தமிழக காங்கிரஸின் கருத்து.

பேய்குளம் சம்பவத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.சிபிஐ விசாரணையை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் ஆனால் மாநில முதலமைச்சர் பரிந்துரை செய்யவேண்டும். இடையில் நீதிமன்றத்திற்கு போவது காலம் தாழ்த்தும் முயற்சி உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் ஒரே குற்றச் செயல்கள் பல வழக்குகளும் ஒவ்வொரு வழக்கிலும் தீர்ப்பைப் பெற்று அதன் பிறகு சிபிஐ விசாரணைக்கு செல்கிறேன் என்று சொல்வது காலம் தாழ்த்தும் செயல் அதைத்தான் புத்திசாலித்தனமாக சொல்கிறார்கள் என்று சொன்னேன்.

இது இறந்து போனவர்களுக்கு செய்கின்ற துரோகம். தலையில் சுற்றிக்கொண்டு மூக்கை தொட வேண்டிய அவசியமில்லை. ஒரு நாளும் தமிழக அரசின் நடவடிக்கைகள் சரியான வகையில் இல்லை. இவர்கள் ஆட்சியில் ஒரு தவறை சுட்டி காட்டினால், அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்பிருந்த ஆட்சிகளிலும் இது நடந்தது என்று சொல்வது பதிலாக இருக்க முடியாது. அப்படி என்றால் இந்த சம்பவத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தமாகிவிடும். முதலில் அது தவறு என்பதை பொறுப்பான அமைச்சர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லனும். கடந்த காலத்தில் அது நடந்திருந்தால் அதை இப்போது ஏற்றுக்கொள்ளலாமா அனுமதிக்கலாமா ?

கடந்த காலத்தில் நடந்த பொழுது இதை இவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். காவலர்கள் மிருகத்தனமாக தாக்கி இருக்கிறார்கள். இதைபோல் கொடுமையான தாக்குதல் அமெரிக்காவில் கூட இல்லை. அவர்கள் கழுத்தை நெரித்துக் கொன்றார்கள், அடித்துக் கொல்லவில்லை. தாக்கப்பட்டவர்களின் ஆசனவாயில் இருந்து ஏராளமான இரத்தம் வந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் எல்லாம் இருக்கிறது. இந்த சம்பவத்தில் அவர்களை பக்கத்தில் இருக்கின்ற பாளையங்கோட்டை கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு 100 கிலோமீட்டர் அப்பால் இருக்கிற கோவில்பட்டி கிளை சிறைக்கு கொண்டு வைத்ததில் ஒரு குற்றம் உள்ளது.

அதில் சூழ்ச்சி உள்ளது. இரண்டாவதாக மாஜிஸ்ட்ரேட் அவர்கள் கூட சம்பந்தப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்க்காமல் சிறையில் அடைப்பது அனுமதி அளித்திருக்கிறார் அதுவே அது விசாரணைக்கு உட்பட்டது. பொதுவாகவே ஒரு திருட்டுக் குற்றத்திற்கு போனால் கூட சம்பந்தப்பட்டவர்களை நீதிபதிகள் பார்ப்பார்கள் ஆனால் எதையும் பார்க்காமல் வழங்கியிருக்கிறார்கள் அவசர அவசரமாக திட்டமிட்டு தொடர்ந்து இருக்கிறது.

இது எல்லா வகையும் இதில் குற்றம் இருக்கிறது. இது ஒரு மக்கள் இயக்கமாக மாறும் அரசாங்கமும் காவல் துறையும் காலம் தாழ்த்த ஒரு மக்கள் இயக்கமாக மாறும்.நாங்கள் கடுமையான நிலையை எடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 லட்ச ரூபாய் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு வழங்க இருக்கிறோம்’’ என்றார்

மேலும் ஒரு கேள்வி


சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் மகேந்திரன் என்பவரும் இதே எஸ்.ஐக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்கிற கேள்விக்கு, ‘’அந்த சம்பவத்திற்கும் எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவோம்’’ என்றார்.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here