பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

0
23
sathai

சாத்தான்குளம், ஜூன் 29:

பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீகோமதி அம்மாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் அருள்மிது ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீகோமதி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழவும், வியாபாரம் பெருகவும், மழை வேண்டியும் சண்டி ஹோமம் நடைபெற்றது.

இதையடுத்து கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி, அம்மாள் மற்றும் கோபுர கலசங்கள், பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் அலங்கார தீபாராதனை, பூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் மக்கள் பொதுமுடக்க விதிப்படி சமுக இடைவெளி விட்டு சுவாமியை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here