இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கை :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசின் வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமால் இருக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு வடிவமைத்து அனுப்பிய விழிப்புணர்வு மடிப்பேடுகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வீடுகள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளி வர வேண்டும் எனவும், வீட்டில் இருந்து வெளி வரும்போது முககவசங்களை அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், கண்ணுக்கு தெரியாத கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்திட அரசு தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டுதல்படி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதால் பூரணம் குணம் பெற்று வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை தொடா;ந்து அதிகரித்துகொண்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சையகங்களுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல், சளி, இரும்பல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் நோயாளிகளின் விபரங்களை உடனடியாக வாட்ஸ் அப் எண் 9385251239 என்ற எண்ணில் அல்லது இ மெயில் முகவரி dailyupdateformatclinics@gmail.com -ல் தெரிவிக்க வேண்டும்.
இந்த விபரத்தினை முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்காத தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ சிகிச்சையக நிர்வாகிகள் மீது பேரிடர்; மேலாண்மை சட்டம் 2005 மற்றும் தொற்றுநோய் பரவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். .