தூத்துக்குடியில் காவல்துறையினரை கண்டித்து வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம் – நீதித்துறையை மிரட்டுவதாக குற்றசாட்டு

0
12
thoothukudi advocate

சாத்தான் குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பு சம்பவம் சம்மந்தமாக மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின்படி கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வருகிறார். சாத்தான்குளம் போலீஸாரிடம் விசாரித்தபோது, அவரிடம் காவல்துறையை சேர்ந்த சிலர் முரண்பட்டதாக புகார் கிளம்பியிருக்கிறது. தற்போது, ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை வலையத்துக்குள் இருக்கிறார்கள். மதுரை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இரண்டு பேர் இறந்த சம்பவத்துக்கு நடுவே அதிகாரிகள் சம்பவமும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி நீதிமன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் அதிசயகுமார், சாமுவேல்ராஜேந்திரன், சுரேஷ்குமார்,ஹரிராகவன், செல்வின், இளையவளவன், சந்தனசேகர் உள்ளிட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here