தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அதிரடி மாற்றம் – புதிய எஸ்பியாக ஜெயக்குமார் நியமனம்

0
14
thoothukudi s.p

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் மூலம் சிறைக்கு அனுப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து நாடும்ழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர், இரண்டு எஸ்.ஐக்கள் மற்றும் காவலர்கள் மீது புகார் சொல்லப்பட்டது. அதனடிப்படையில் ஆய்வாளர், எஸ்.ஐக்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். மதுரை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்து உத்தரவுக்ளை பிறப்பித்து வருகிறது.

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக இருந்த அருண்பால கோபாலன் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக விழுப்புரம் எஸ்பியாக ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மாற்றப்பட்டிருக்கும் எஸ்.பி அருண்பாலகோபாலன் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். கடந்த மாதம் பேய்குளம் ஊரை சேர்ந்த மகேந்திரன் போலீஸ் விசாரணைக்கு பிறகு இறந்த சம்பவம் நடந்தது. அப்போது முறையாக விசாரணை நடத்தியிருந்தால், இப்போது நடந்திருக்கும் சம்பவம் நடந்திருக்காது’ என்கிறார்கள். அதை கவனிக்காமல் விட்டுவிட்டார் எஸ்.பி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here