போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் – உயர்நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

0
21
madurai high

போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் இருவர் உயிரிழந்த உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் படி கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கலாம். வழக்கில் முகாந்திரம் உள்ளதால் போலிசார்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி விசாரணையை தொடங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

சி.பி.சி.ஐ.டி டிஎஸ்பி அனில்குமார் காவல்துறை டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்காமல் இன்றே விசாரணையை தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அடங்கிய அமர்வு உத்தரவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here