கயத்தார் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளிபோக்சோ சட்டத்தில் கைது

0
79
news

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் சண்முகையா(30). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்டடத்தொழிலாளியான இவர், அந்த கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதில், அந்த சிறுமி தற்போது கர்ப்பாமாக உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் பத்மாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சண்முகையாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here